Tamil

பூ மாதிரி சாஃப்ட் இட்லி வேணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்!

வீட்டில் சாஃப்டான இட்லி செய்வற்கான சில எளிய சமையல் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

Tamil

எல்லோருக்கும் பிடிக்கும் இட்லி

காலை உணவுகளில் பலரும் விரும்பி சாப்பிடுவது இட்லிதான். அதிலும் பஞ்சு போன்ற மென்மையான இட்லி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

Image credits: instagram
Tamil

இட்லி சாஃப்டாக வரணுமா?

இட்லி மாவு அரைக்கும்போது சில விஷயங்களை சரியாகக் கவனித்தால் போதும். கல் போன்ற இட்லி கூட பஞ்சு போல மாறிவிடும்.

Image credits: instagram
Tamil

அரிசி ஊறவைக்கும் நேரம்

இட்லிக்கு அரிசியை 3 முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே ஊற வைக்க வேண்டும். இதற்கு மேல் ஊற வைப்பது கூடாது.

Image credits: instagram
Tamil

உளுந்துக்கு ஒரு மணி நேரம் போதும்

உளுந்தை ஒரு மணி நேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால், மாவு சீக்கிரம் புளித்துவிடும்.

Image credits: instagram
Tamil

ஜில்லுனு தண்ணி ஊத்துங்க!

மாவு அரைக்கும்போது சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்தலாம். இது மாவு சூடாகாமல், மென்மையாக அரைபட உதவும்.

Image credits: instagram
Tamil

வெந்தயம், சாதம் சேர்க்கலாம்

அரிசி அரைக்கும்போது, தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் மற்றும் சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி சாஃப்டாக வரும்.

Image credits: instagram
Tamil

அவல் சேர்த்தால் இன்னும் சாஃப்ட்

இட்லி மாவு இன்னும் மென்மையாக இருக்க, ஊறவைத்த அவல் சேர்த்தும் அரைக்கலாம். இது இட்லிக்கு கூடுதல் மென்மையைக் கொடுக்கும்.

Image credits: instagram

Peanuts: வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!

Green Tea : தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிச்சா இவ்வளவு நன்மைகளா?

Broccoli சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்! என்ன தெரியுமா?

Weight Loss: உடல் எடையை குறைக்க 7 புரோட்டீன் நிறைந்த பழங்கள்!