வீட்டில் செய்யும் பூரியும் ஹோட்டல் ஸ்டைலில் உப்பலாக வர என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
Image credits: pinterest
Tamil
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 500 கிராம், மைதா - 100 கிராம், ரவை - 50 கிராம், எண்ணெய் - 50 மி.லி., பொரிப்பதற்கு எண்ணெய் - 1 லிட்டர், தண்ணீர் - 100 முதல் 150 மி.லி., உப்பு - தேவையான அளவு.
Image credits: facebook
Tamil
பூரி செய்யும் முறை
500 கிராம் கோதுமை மாவு, 50 கிராம் ரவை, 100 கிராம் மைதாவை ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இதனால் பூரி எண்ணெய் குடிக்காது.
Image credits: stockphoto
Tamil
மாவு பிசைவது எப்படி?
இப்போது, பூரி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவை ஒரு 10 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்தால், மாவு மென்மையாகிவிடும்.
Image credits: our own
Tamil
பூரியை தேய்ப்பது எப்படி?
பத்து நிமிடங்கள் கழித்து, மாவை மீண்டும் உங்கள் உள்ளங்கையால் அழுத்திப் பிசையுங்கள். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து, கோதுமை மாவு தொட்டு பூரியாகத் தேய்க்கவும்.
Image credits: Gemini
Tamil
எண்ணெயில் பொரிக்கும்போது...
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தேய்த்துவைத்த பூரிகளைப் பொரித்தெடுக்கவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பினால், பூரி பலூன் போல உப்பி, பொன்னிறமாக மாறும்.