Tamil

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 9 சிறந்த பழங்கள்!

Tamil

ராஸ்பெர்ரி (Raspberries):

இதில் அதிகப்படியான நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

ஸ்ட்ராபெர்ரி (Strawberries):

வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பழம், உடலில் இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) மேம்படுத்தி, தேவையற்ற பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

அவகேடோ (Avocado ):

இப்பழத்தில் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் (Healthy fats) மற்றும் பொட்டாசியம் இரத்த சர்க்கரை திடீரென அதிகரிப்பதைத் தடுக்கின்றன.

Image credits: Getty
Tamil

பேரிக்காய் (Pear):

நார்ச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் பேரிக்காய், செரிமானத்தை மெதுவாக்கி, சர்க்கரை இரத்தத்தில் மெதுவாகக் கலக்க வழிவகை செய்கிறது.

Image credits: Getty
Tamil

சிட்ரஸ் பழங்கள் (Citrus Fruits ):

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிக்குச் சிறந்த தேர்வாகும்

Image credits: Getty
Tamil

ஆப்பிள் (Apple):

ஆப்பிளில் உள்ள 'பெக்டின்' (Pectin) எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன், இன்சுலின் தேவையைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

கிவி பழம் (Kiwi):

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கிவி பழம், இன்சுலின் ஹார்மோனின் செயல்பாட்டைச் சீராக்கி இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது.

Image credits: Getty
Tamil

செர்ரி பழங்கள் (Cherries):

செர்ரி பழங்களில் உள்ள 'ஆந்தோசயினின்கள்' (Anthocyanins) என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், இன்சுலின் உற்பத்தியை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் ஆற்றல் கொண்டது.

Image credits: Getty
Tamil

தர்பூசணி, முலாம்பழம் பழங்கள் (Melons ):

இவற்றில் நீர்ச்சத்து மிக அதிகம். இவற்றைத் தகுந்த அளவில் (மிதமாக) உட்கொள்ளும்போது உடல் வறட்சியை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.

Image credits: Getty

Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள்: இயற்கையான தீர்வுகள்

குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டும் 8 ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்

Heart Health: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 8 சூப்பர் பழங்கள்!