Tamil

கோடை வெப்பத்தைத் தணிக்க அலுவலக இடைவேளைக்கான 6 சிறந்த இந்திய பானங்கள்

Tamil

நீர்மோர் (Buttermilk):

இஞ்சி, சீரகம், மிளகாய் சேர்த்த மோர், கோடை வெப்பத்தை நீக்கி உடலைக் குளிர்விக்கும். இது செரிமானத்திற்குச் சிறந்த பானமாகும். இந்தியர்களின் விருப்பமான இயற்கை பானம் இது.

Image credits: Pinterest
Tamil

நன்னாரி சர்பத் (Nannari Sarbath):

மூலிகை வேர் நன்னாரி சர்பத் ரத்தத்தைச் சுத்திகரித்து உடல் சூட்டைத் தணிக்கும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை இன்னும் கூடும். கோடைக்கு ஏற்ற ஆரோக்கியமான பானம் இது!

Image credits: Pinterest
Tamil

இளநீர் (Tender Coconut):

இயற்கை தந்த வரப்பிரசாதம் இளநீர். இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துகின்றன. வேலையினால் ஏற்படும் சோர்வை நீக்கி, உடனடி ஆற்றலை வழங்க இது ஒன்றே போதும்.

Image credits: Pinterest
Tamil

ஆம் பன்னா (Aam Panna):

வட இந்தியாவில் பிரபலமான இப்பானம் பச்ச மாங்காயால் செய்யப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் C மற்றும் தாதுக்கள் அம்மை நோய், வெயில் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Image credits: Pinterest
Tamil

ரோஸ் மில்க் (Rose Milk):

வேலை இடைவேளைக்கு ரோஸ் மில்க் ஒரு சிறந்த பானம். ஜில்லென்ற பாலில் ரோஜா இதழ் சாறு கலந்து செய்யப்படுவதால், இது உடல் சூட்டைத் தணித்து உங்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

புதினா எலுமிச்சை சாறு (Mint Lemonade):

எலுமிச்சை சாற்றுடன் சிறிது புதினா இலைகளைச் சேர்த்து அருந்தும்போது அது இரட்டிப்பு புத்துணர்ச்சியைத் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து வேலையில் கவனத்தைச் செலுத்த உதவுகிறது.

Image credits: Pinterest

ஆரோக்கியம் தரும் பழத்தோல்கள்: தோலுடன் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

கோடையில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும்அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

கீட்டோ டயட்டின் 5 நன்மைகள்: ஆரோக்கியமான வாழ்விற்கான எளிய வழிமுறை!

Gut Health:குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் ஓர் எளிய வழிகாட்டி