Beauty

சோள மாவு

சோள மாவு ஹேர்பேக் தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும். சோள மாவின் ஸ்டார்ச் முடியின் வேர்க்கால்களில் சென்று அதை உறுதியாக்கும். 

Image credits: Getty

சிறந்த ஹேர்பேக்

சோள மாவு ஹேர் பேக் முடியின் வேர்க்கால்களில் உள்ள வியர்வை, எண்ணெய்ப் பசையை உறிஞ்சும். முடி வளர்ச்சியை நன்கு தூண்டிவிடும். 

Image credits: Getty

சோள மாவு சத்துக்கள் ​

வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை சோள மாவில் உள்ளன. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. 

Image credits: Getty

முட்டை

சோள ஹேர் பேக் செய்ய ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு தண்ணீரில் கலந்து எடுக்க வேண்டும். 

Image credits: Getty

மாவு பதம்

கலக்கி வைத்துள்ள சோள மாவை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கெட்டியாகும் பதத்தில் நன்கு கலக்கி கொள்ளுங்கள். இதை இறக்கி ஆற வைத்து கொள்ளுங்கள். 

Image credits: Getty

ஹேர் பேக்

இறக்கி வைத்த சோளமாவு ஆறியதும் மிக்ஸியில், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து அடித்து எடுத்து கொள்ளுங்கள். 

Image credits: Getty

தேன்

முட்டை, சோள மாவு கலவையுடன் தேன் சேருங்கள். இப்போது தலையில் தேய்க்கும் பதம் வந்திருக்கும். சோள மாவு ஹேர் பேக் தயார். 

Image credits: Getty

தலைமுடி வளர

தயாரான சோள மாவு ஹேர் பேக்கை தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரையிலும் நன்கு அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள். பலன் கிடைக்கும். 

Image credits: Getty

வாரம் ஒரு முறை

சோள மாவு ஹேர்பேக்கை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது முடியின் வளர்ச்சியை தூண்டும். 

Image credits: Getty

முகம் பொலிவு பெற காலையில் இதை செய்யுங்க!