Tamil

சிறந்த சர்வைவல் படங்களின் லிஸ்ட்

உங்களுக்கு த்ரில்லிங் அனுபவம் தரும் சர்வைவல் திரைப்படங்கள் பிடிக்குமென்றால், சூப்பர் த்ரில் கொடுக்கும் படங்களின் லிஸ்ட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Tamil

தி கோட் லைஃப்

பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். சவுதி அரேபியா பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்டு உயிர்வாழும் ஒருவரின் கதை இது.

Image credits: social media
Tamil

மஞ்சும்மல் பாய்ஸ்

இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். கொடைக்கானலில் உள்ள குணா குகைக்குச் செல்லும் நண்பர்கள் குழு, அங்கு சந்திக்கும் ஒரு துயர சம்பவம்தான் கதை.

Image credits: social media
Tamil

ட்ராப்டு (Trapped)

கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் தனியாக மாட்டிக்கொள்ளும் இளைஞன்,  தப்பிக்கப் போராடுவதுதான் கதை. செம த்ரில்லிங்காக இருக்கும். ஜீ5 , அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Image credits: social media
Tamil

2018

2018-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றிய கதை இது. ஊர் மக்கள் தங்களைத் தாங்களே எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போராடினார்கள் என்பதே கதை.  சோனி லிவ் (Sony LIV) தளத்தில் பார்க்கலாம்.

Image credits: social media
Tamil

NH 10

அனுஷ்கா சர்மா நடித்த படம். ஒரு கணவன்-மனைவி ஜாலியாக ரோட் ட்ரிப் செல்லும்போது, ஒரு கௌரவக் கொலையை நேரில் பார்க்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய சோகம் நடக்கிறது.

Image credits: social media
Tamil

ஹெலன்

இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். தான் வேலை செய்யும் கஃபேயின் ஃப்ரீசர் அறையில் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ளும் ஹெலன், தனது உயிருக்குப் போராடுவதுதான் கதை.

Image credits: social media
Tamil

மலையன்குஞ்சு

இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட ஒருவர், அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

Image credits: social media

Rashmika: குட் நியூஸ் சொன்ன விஜய் - ராஷ்மிகா.! குவியும் வாழ்த்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான 7 மலையாள நடிகைகள் லிஸ்ட் இதோ!

அபிஷேக் பச்சனை காதலிக்க மறுத்த கரீனா கபூர் - என்ன காரணம்?

இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ