cinema
1999 முதல் 2002 வரை, சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையேயான உறவு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அவர்களின் முறிவு சர்ச்சைக்குரியதாக இருந்ததால் அதிகம் பேசப்பட்டது.
2002 ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் சல்மானுடனான முறிவை ஐஸ்வர்யா அறிவித்தார். பிரிந்த பிறகும் சல்மானால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் ஐஸ்வர்யா ஒப்புக்கொண்டார்.
சல்மான் தன்னை சந்தேகித்ததாகவும், ஷாருக் கான் முதல் அபிஷேக் பச்சன் வரை ஒவ்வொரு சக நடிகருடனும் தன்னை இணைத்துப் பேசுவதாகவும் ஐஸ்வர்யா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஐஸ்வர்யா கூறுகையில், "பலமுறை சல்மான் கான் என்னை உடல் ரீதியாக தாக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, எந்த காயமும் ஏற்படவில்லை. மறுபுறம், எதுவும் நடக்காதது போல் நான் வேலைக்குச் சென்றேன்."
ஏப்ரல் 2007 இல், ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை மணந்தார். இதுகுறித்து அவரது முன்னாள் காதலன் சல்மான் கானின் கருத்தை கேட்டபோது, அவர் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்து சல்மான் கான் கூறுகையில், "அவர் அபிஷேக்கை திருமணம் செய்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
மேலும் சல்மான் கூறுகையில், "அவர் (அபிஷேக்) ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பையன். அவள் (ஐஸ்வர்யா) வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிறார்.