அஜித் குமாரின் 'விடாமுயற்சி' பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியானது. 175-300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் 135.84 கோடி ரூபாய் வசூலித்து தோல்வியடைந்தது.
பிப்ரவரி 7 அன்று 'ஹோஷியார் சிங்' லவ்யாபா, 'பேட்எஸ் ரவிகுமார்' மற்றும் 'தண்டேல்' படங்கள் வெளியாகின. 100 கோடி ரூபாய் செலவில் உருவான 'தண்டேல்' மட்டுமே வெற்றிபெற்றது.
'தண்டேல்' தவிர, பிப்ரவரி 7 அன்று வெளியான மற்ற படங்களான 'ஹோஷியார் சிங்' 2.29 கோடி, லவ்யாபா 9.53 கோடி மற்றும் பேட்எஸ் ரவிகுமார் 11.09 கோடி வசூல் செய்தன.
பிப்ரவரி 14 அன்று 'சாவா', லைலா, 'டேவிட்' , 'ஃபயர்', பிரம்ம ஆனந்தம் , 'பான்கிலி' மற்றும் 'ப்ரோமான்ஸ்' போன்ற பன்மொழி படங்கள் வெளியானது. இதில் 'சாவா' மட்டுமே ஓடியது.
'சாவா' 549 கோடிக்கு மேல் வசூலித்தது. லைலா 4.86 கோடி, 'டேவிட்' 5.91 கோடி, 'ஃபயர்' 1.6 கோடி, பிரம்ம ஆனந்தம் 2.1 கோடி, 'பான்கிலி' 3.86 கோடி மற்றும் 'ப்ரோமான்ஸ்' 13.99 கோடி வசூலித்து
பிப்ரவரி 20 அன்று மலையாளத்தில் 'ஆபிசர் ஆன் டியூட்டி' மட்டுமே வெளியானது. இது 12 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் 24.5 கோடி ரூபாய் வசூலித்தது.
பிப்ரவரி 21 அன்று 'கெட் செட் பேபி' , 'டிராகன்' , 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி', நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் ஜாபிலம்மா நீக்கு அந்த கோபமா வெளியாகின.
'டிராகன்' 83.7 கோடிக்கு மேல் வசூலித்தது. 'கெட் செட் பேபி', 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி', நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் ஜாபிலம்மா நீக்கு அந்த கோபமா தோல்வியை சந்தித்தது.
பிப்ரவரி 28 அன்று தெலுங்கு திரைப்படம் 'மஜாக்கா' வெளியானது. இந்த படம் முதல் நாளில் 4.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.