Career
நீங்கள் முழுநேர வேலையில் இருந்துகொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறீர்களா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ...
வேலை, படிப்பு மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க முன்கூட்டியே திட்டமிடுங்கள். அதற்கு ஒரு அட்டவணையை உருவாக்குங்கள்.
வேலை மற்றும் படிப்புக்கான நேரத்தை சமநிலைப்படுத்தி, மிக முக்கியமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மதிய உணவு இடைவேளைகள் அல்லது பயண நேரத்தை விரைவான திருத்தம், வாசிப்பு அல்லது கல்வி வீடியோக்களைப் பார்க்கப் பயன்படுத்தவும்.
உங்கள் பாடத்திட்டத்தை சிறிய பகுதிகளாகப் பிரித்து, சிலபமாக எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயுங்கள்.
கற்றல் திறனை அதிகரிக்க ஆன்லைன் படிப்புகள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான செயலிகளைப் பயன்படுத்தவும்.
டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி பணிகள், தேர்வுகள் மற்றும் வேலைகளைக் கண்காணிக்கவும்.
திறமையாகப் பணிபுரியவும் படிப்பில் கவனம் செலுத்தவும் சோர்வைத் தவிர்க்க்க வேண்டும். அதற்கு போதிய அளவுக்கு தூக்கம், உடற்பயிற்சி அவசியம்.