சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Image credits: social media
எவ்வளவு வரம்பு?
ஏனெனில் லிமிட்டை மீறி சேமிப்பு கணக்கில் பணம் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறையின் கண்காணிப்பு கீழ் வரலாம். ஆனால் சேமிப்புக் கணக்கில் பண வைப்பு வரம்பு எவ்வளவு தெரியுமா?
Image credits: Freepik
ஒரு நிதியாண்டில் எவ்வளவு?
ஒரு நிதியாண்டிற்குள் மொத்தமாக ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கம் டெபாசிட் அல்லது எடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
Image credits: Getty
வருமான வரி சோதனை
ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்வது அல்லது திரும்பப் பெறுவதால் வருமான வரித்துறை உங்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.
Image credits: Getty
ஆதார் எண்
வருமான வரி வழிகாட்டுதல்களின்படி தங்கள் பான் அல்லது ஆதார் விவரங்களை வழங்க வேண்டும்.
Image credits: Getty
பான் எண் கட்டாயம்
ரூ.50,000க்கு மேல் செய்யப்படும் ரொக்க டெபாசிட்களுக்கும் பான் எண் தேவை. வருமான வரிச் சட்டத்தின் படி, ஒரே நாளில் ரூ.2 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்
Image credits: Getty
ரூ.2 லட்சம் மட்டுமே
ஒரு நாளில் ரூ.2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.