business
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு 40ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது
தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. சிறந்த முதலீடாக தங்கம் இருப்பதால் மக்கள் அதிகளவில் வாங்குகிறார்கள். விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது
மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு தங்கம் பெரிய அளவில் உதவியாக இருக்கும். எந்த நேரத்திலும் விற்கவோ, அடகு வைக்கவோ முடியும்.
தங்கத்தின் விலையானது கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 59,640 ரூபாய்க்கு விற்பனையானது
உச்சத்தை தொட்ட தங்கம் விலை அடுத்த சில நாட்களிலேயே குறைய தொடங்கியது. ஒரு சவரனுக்கு 4000 ரூபாய் வரை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு சில நாட்களில் தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்தது. 600, 800 ரூபாய் என தினந்தோறும் அதிகரித்ததால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி
நேற்று முன் தினம் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்த தங்கம், நேற்று அதிரடியாக ரூ.720 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கும், சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டது
தங்கம் மார்க்கெட் இன்று விடுமுறை காரணமாக நேற்றைய விலையிலேயே தங்கமானது இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு சவரன் 57,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.