business
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி ஒரு சவரன் 59,640 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது.
ஓரிரு ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் ஒரு கிராம் 10,000 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய் என அதிகரிக்கும் - பொருளாதார வல்லுநர்கள்
தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கடன் வாங்கியாவது நகைகளை வாங்கி குவிக்கின்றனர்.
தங்கம் கையிருப்பில் இருக்கும் போது மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக தங்கம் உள்ளதால் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.
தங்கத்தின் விலையானது இரண்டு நாட்களில் சவரனுக்கு 1160 ரூபாய் குறைந்திருந்தது. நேற்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்தது.
நேற்று தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.7150க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 7,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 57.080 விற்பனையாகிறது