business
தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை தினந்தோறும் அதிகரித்து வருவதால் தற்போதே தங்கத்தை வாங்கி வைக்க திட்டம்
2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 10ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை அடுத்த 14 ஆண்டுகளில் 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது
தங்கம் விலையானது அடுத்த ஒரு சில ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் என உயர வாய்ப்பு - பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு தங்கம் மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது. திடீரென பண தேவைக்கு தங்கத்தை விற்றோ, அடமானம் வைத்தோ பணத்தை உடனடியாக பெற முடியும்
தங்கத்தின் விலையானது இரண்டு தினங்களில் சவரனுக்கு 1160 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அடுத்த இரண்டு தினங்கள் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை
நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கும், சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டது
தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன் படி கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கு விற்பனை