பைக்கில் எஞ்சின் ஆயில் பற்றி கவனமாக இருக்க வேண்டும். பழைய எஞ்சின் ஆயில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் எஞ்சின் ஆயிலை மாற்ற வேண்டும். நல்ல தரமான ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Image credits: Freepik
செல்ஃப் ஸ்டார்ட் வேண்டாம்
குளிர்காலத்தில் காலையில் பைக் ஸ்டார்ட் செய்ய செல்ஃப் ஸ்டார்ட் சரிபடாது கிக் செய்வதே நல்லது. குறிப்பாக காலையில் முதல் முறையாக பைக் ஸ்டார்ட் செய்யும்போது கிக்கரை பயன்படுத்த வேண்டும்.
Image credits: Google
சோக் பயன்படுத்தவும்
பைக் ஸ்டார்ட் ஆக சிரமமாக இருந்தால் சோக் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் எஞ்சினுக்கு எண்ணெய் செல்ல உதவும். இதனால் பைக் எளிதில் ஸ்டார்ட் ஆகும்.
Image credits: Google
ரேஸ் கொடுங்கள்
குளிர்காலத்தில் காலையில் பைக் ஸ்டார்ட் செய்த உடன் பைக்கை ஓட்ட வேண்டாம். சிறிது நேரம் ரேஸ் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பைக் நடுவில் நிற்க வாய்ப்பு உள்ளது.
Image credits: Google
அடிக்கடி ஆன் செய்யவும்
பைக் தேவையில்லாத போதும் அடிக்கடி ஆன் செய்ய வேண்டும். பல நாட்கள் ஓரங்கட்டி வைத்திருந்தால் ஆன் செய்யும்போது சிக்கல்கள் வரும்.
Image credits: Google
ஸ்பார்க் பிளக்
ஸ்பார்க் பிளக்குகளை சுத்தமாக வைத்திருக்கவும். கார்பன் படிந்தாலும் பைக் விரைவில் ஸ்டார்ட் ஆகாது. அதனால் ஸ்பார்க் பிளக்கை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.