Watch : தப்பியோடிய இலங்கை அதிபரால் தொடரும் போராட்டம்! - அடுத்த என்ன செய்ய போகிறார்கள் மக்கள்?

கொழும்புவில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீடு மற்றும் அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கும் போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாவிட்டால் பார்லிமென்ட்டையும் கைப்பற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

First Published Jul 14, 2022, 9:31 AM IST | Last Updated Jul 14, 2022, 9:31 AM IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த 96 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை கொழும்புவில் இன்று ஆசியாநெட் நியூஸ் குழு களத்தில் சந்தித்துப் பேசியது. 

கொழும்பில் இருக்கும் அதிபரின் வீட்டைக் கைப்பற்றி தற்போது போராட்டக்காரர்கள் உணவு சமைத்து, விளையாட்டுக்களில் ஈடுபட்டு, கூட்டம் போட்டு தங்களது அடுத்தகட்ட நடவடிக்களை முடிவு செய்து வருகின்றனர். 

ஆசியாநெட் குழுவிடம் போராட்டக்காரர்கள் பேசுகையில், ''இன்று கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்வார் என்று எதிர்ப்பார்த்து இருந்தோம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால்அடுத்தது எங்களது போராட்டம் முடிவுக்கு வராது. இன்றுடன் 96 நாட்கள் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

இங்கேயே சமைத்து சாப்பிட்டு, இங்கேயே உறங்கி வருகிறோம். வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் பெட்ரோல் வேண்டும் எங்களிடம் பெட்ரோல் இல்லை. நான் எனது பெற்றோரை கடந்த மூன்று மாதங்களாக பார்க்கவில்லை. எங்களது நாடு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். அதுவரை ஓய மாட்டோம். இந்த நிலை நீடித்தால், நாங்கள் எங்களது நாட்டில் பிழைக்க முடியாது. கோத்தபய ராஜினாமா செய்யாவிட்டால், அடுத்தது பார்லிமெண்டை கைப்பற்றுவோம்.

sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?

எங்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. எங்களது பணத்தை ராஜபக்சே குடும்பத்தினர் சுருட்டிக் கொண்டனர். நாட்டுக்காக எதையும் அவர்கள் செய்யவில்லை. புதிதாக ஒருவர் பொறுப்பை ஏற்கும்பட்சத்தில், அவர் நாட்டை நல்வழிப்படுத்துவார் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.