நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் லாரியின் ஓட்டுநர் பலி.
திருச்சியிலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி கொண்டு தூத்துக்குடிக்கு சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது லாரியானது, சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு கண்டெய்னர் லாரியில் மோதியது.
அதில் லாரியில் அமர்ந்திருந்த கிளீனரான ஆனந்த் (33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த கலையரசன் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க:கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!
உயிரழந்த ஓட்டுனரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த மதுரை மேலூரை சேர்ந்த ஆன்ந்துக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நின்று கொண்டிருந்த லாரி ஓட்டுனர் லாரியில் எந்த வித சமிக்ஞை விளக்குகளையும் எரிய விடாமல் நிறுத்தி இருந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:கோவையில் கோவில் அருகே மர்மமான முறையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. சென்னையில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவு.