பட்டப்பகலில் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ.. மதுரையில் பரபரப்பு

மதுரையில் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திகொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

First Published Oct 17, 2022, 6:12 PM IST | Last Updated Oct 17, 2022, 6:12 PM IST

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகவும் இதனை கடுப்பட்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:மாணவி சத்தியா தயாரிடம் ஒன்னரை மணி நேரம் துருவித் துருவி விசாரணை.. ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க CBCID திட்டம்

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் செய்திகள் மூலம் பார்க்க முடிகிறது. இதனால் மாணவர்களிடையே போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன.   

மேலும் தமிழகத்தில் போதையினால் நிகழ்ந்தேறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மதுரையில் பட்ட பகலில் கஞ்சா போதையில் அரிவாளால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வெட்டிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தமிழகத்தில் சட்ட- ஒழுங்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க:யமகா நிறுவன பிரச்சனையில், முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு.? மண்ணில் மக்களுக்கு துரோகம்.. கொதிக்கும் சீமான்.