மழைநீர் பணிகள் குறித்து மக்கள் பாசிட்டிவாக சொல்கிறார்கள்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு !

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

First Published Nov 13, 2022, 2:26 PM IST | Last Updated Nov 13, 2022, 2:26 PM IST

கனமழையால் சென்னையில் பல்வேறு சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக சென்னை திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.தமிழகத்தில் எத்தனை மழையையும் சமாளிப்போம். அரசின் பணிகளை மக்களே பாராட்டுகிறார்கள். சென்னை மாநகராட்சியும் பொதுப் பணித் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும். மழைநீர் பணிகள் குறித்து பொதுமக்கள் பாசிட்டிவாக கூறுகிறார்கள் என்று கூறினார். கனமழையால் சீர்காழியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை அங்கு ஆய்வு செய்யவுள்ளார். வெள்ளத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..32 ஆண்டுகள் சிறை..இன்னும் திருப்தி இல்லையா.? நான் கணவருடன் செல்வேன் - உருக்கமாக பேசிய நளினி !

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !