Diwali : களைக்கட்டும் தீபாவளி பண்டிகை.. விருதுநகர் சந்தையில் ரூ.1 கோடி விற்பனையான ஆடுகள்..
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு மற்றும் கிடாய் விற்பனை களைக்கட்டியது
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மேலும் படிக்க:கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!
அதன் படி, திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று செயல்பட்ட வாரசந்தையில், அதிகாலை 4 மணி முதலே ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. சாதாரண நாட்களில் ரூ.40 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும் நிலையில், சிறப்பு சந்தையான இன்று ரூ.1 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க:தீபாவளியை கொண்டாடுவதற்கு ஆசை ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி இருவர் பலி..
ஒரு கிடாய் ரூ.6,000 முதல் அதிகபட்சமாக ரூ.18,000 வரை விற்கப்பட்டது. மேலும் சாதாரண நாட்களில் 800 ஆடுகள் வரை விற்பனையாகி வரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டும் 1000 முதல் 1500 ஆடுகள் வரை விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரித்தனர். மேலும் ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்ததால் இந்த ஆண்டு இறைச்சி விலை அதிகரிக்க கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.