புளிய மரம் விழுந்து திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!!

மாந்துறையில் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால், திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

First Published Oct 21, 2022, 6:58 PM IST | Last Updated Oct 21, 2022, 7:01 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் லால்குடி அருகே மாந்துறையில்  உள்ள திருச்சி சிதம்பரம்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 50 ஆண்டுகள்  பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. 

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த பேருந்துகள் செல்ல முடியாமல் அனைவரும் நடந்தே செல்ளும் நிலை ஏற்பட்டது. இது குறித்து லால்குடி போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் மற்றும் லால்குடி தீயணைப்பு படையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதனால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மரத்திற்கு கீழே நிறுத்தப்பட்டு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் மீது மரம் விழுந்ததில் சேதமடைந்தன. 

Watch : முசிறி அருகே தக்காளி ஏற்றிச் சென்ற வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து!