Watch : முசிறி அருகே தக்காளி ஏற்றிச் சென்ற வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து!

திருச்சி மாவட்டம் முசிறி தக்காளி ஏற்றி சென்ற வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 

First Published Oct 21, 2022, 3:55 PM IST | Last Updated Oct 21, 2022, 3:55 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சேர்ந்தவர் டிரைவர் அசோக். இவர் ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் மார்க்கெட்டுக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு முசிறி வழியாக சென்றுள்ளார். அப்போது முசிறி கொக்கு வெட்டியான் கோயில் அருகே லோடுவேன் வந்தபோது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க ஒதுங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த வாய்க்காலில் பாய்ந்தது.

இதில் வேனில் இருந்த தக்காளிகள் வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.தண்ணீரில் மிதந்து சென்ற தக்காளிகளை அப்பகுதி மக்கள் அரித்து அள்ளிச் சென்றனர். விபத்தில் டிரைவர் அசோக்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு முசிறி போலீசார் கிரேன் உதவியுடன் வேனை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.