பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு சீல்!!

நெல்லை மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அலுவகத்தில் இருந்து கட்சிக் கொடியும் அகற்றப்பட்டது.

First Published Oct 1, 2022, 7:45 PM IST | Last Updated Oct 1, 2022, 7:47 PM IST

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து இருக்கும் மத்திய அரசு, அதற்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வாடகை கட்டிடத்தில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் நெல்லை மாவட்ட கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பிற்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதையடுத்து, அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணைஆணையர் சீனிவாசன் முன்னிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்படுவதற்கு முன்பாகவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தின் முன்பு பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவகத்தை மொத்தமாக பூட்டி சீல்... சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..