நெல்லையில் தேச ஒற்றுமைக்கான பேரணி; கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!!

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின்  பிறந்தநாளை முன்னிட்டு மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் தூய யோவான் கலைக் கல்லூரி சார்பில் தேச ஒற்றுமைக்கான பேரணி நெல்லையில் இன்று நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

First Published Oct 31, 2022, 3:18 PM IST | Last Updated Oct 31, 2022, 3:18 PM IST

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார்வல்லவாய்பட்டேல் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது . இதனையொட்டி நெல்லையில் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும்  தூய யோவான் கல்லூரி சார்பில் தேச ஒற்றுமை பேரணி நடைபெற்றது . பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முன்பிருந்து துவங்கிய  பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் சுதாகர் ஐசக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த பேரணி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று  இறுதியில் வ. உ.சி. மைதானம் வந்தடைந்தது.  இதில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சியில் கள விளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சோபியா கிறிஸ்டினா, கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இறுதியில் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தில் ஓடிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!!

Video Top Stories