14வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நிரம்பிய வைகை அணை.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !!
14வருடங்களுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்டியது வைகை அணை.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது. 71அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட வைகை அணை கடந்த 17ஆம் தேதியன்று காலை 69அடியை எட்டியதும் தேனி, மதுரை உள்ளிட்ட 5மாவட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவில் 70அடியை எட்டியதும் 7பெரிய மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இருந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்பட்ட நிலையில் தற்போது அணையின் முழுக்கொள்ளவான 71 அடியை வைகை எட்டியுள்ளது. இதையடுத்து அணையின் 7பெரிய மதகுகள் வழியாக நீர்வரத்துள்ள 1,817கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
இந்த முழுக்கொள்ளளவானது கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 14ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டில் தேக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக 69அடியில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதும், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் 70அடியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.ஆனால் தற்போது 71அடிக்கும் வைகையில் தண்ணீர் தேக்கப்பட்டிருப்பது 5மாவட்ட பொதுமக்கள் விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!