Video : ஓசூர் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த மனித எலும்புக்கூடு.. மிரண்டு போன பொதுமக்கள்

குடியிருப்பு பகுதிக்கு அருகே மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jan 4, 2023, 3:11 PM IST | Last Updated Jan 4, 2023, 3:37 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேருநகர் அடுத்த ஜீவாநகர் குடியிருப்பு பகுதி அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. காடு போன்று காணப்படும் இந்த இடத்தில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது.  இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓசூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

எலும்புக்கூடு இருந்த சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல மாதங்களாக அந்த எலும்புக்கூடு அப்பகுதியில் கிடந்தது தெரிய வந்தது.  எலும்பு கூடாக கிடந்தது ஆணா ? அல்லது பெண்ணா ? எப்படி எலும்புக்கூடு இந்த இடத்திற்கு வந்தது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கைப்பற்றிய எலும்புக்கூட்டை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் துறைக்கு எலும்புக்கூட்டின் பாகங்களை அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ

Video Top Stories