Asianet News TamilAsianet News Tamil

9 மணியை கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி வரை 74.6 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இன்னும் சில வாக்குச்சாவடிகள் வாக்குச்செலுத்தும் பணி நிறைவடையாமல் உள்ளதால் இறுதியான வாக்குப்பதிவு நிலவரங்கள்  குறித்த விபரங்கள் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல்  நடத்தும் அலுவலர் பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 238 வாக்கு சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இறுதி வாக்குப்பதிவு குறித்த தகவல்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்ளுக்கு தெரிவிக்கையில்

இதுவரை 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சில இடங்களில் தொடர்ரந்து வாக்குப்பதிவு நிறைவடையாத நிலையில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருவதாகவும், அனைத்து வாக்குச்சாவடிகளிலிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் இறுதியாக பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்த  முழுமையான தகவல்லகள் வெளியிடப்படும். அனைத்து வாக்குசாவடிகளில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில்  வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில்  மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக இன்று ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. வேட்பாளர்களின் வரவு செலவு கணக்குகளை ஒரு மாத கால அவகாசத்தில்  தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார். இரவு 9 மணியை கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு தொடர்கிறது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள் வாக்காளர்கள்.

இதையும் படிங்க..Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

Video Top Stories