திருவொற்றியூரில் பெருக்கெடுத்து ஓடும் பாமாயில்; மீனவர்கள் அதிர்ச்சி!!
சென்னை துறைமுகத்திலிருந்து பூமிக்கு அடியில் ராட்சத குழாய் மூலம் திருவொற்றியூர் திருச்சினா குப்பம் அருகே உள்ள கேடிவி சன் லேண்ட் ஆயில் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக பாமாயில் சென்று கொண்டு இருக்கிறது. நேற்று மதியம் தீடீரென ராட்சத குழாயில் பாமாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆயிலானது காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள படகு பழுது பார்க்கும் இடத்தின் அருகே தரையில் சுமார் 1 டன் எடையுள்ள பாமாயில் மிதங்கி நிற்கிறது. இது குறித்து கேடிவி எண்னெய் நிறுவனத்திற்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் மோட்டார் மூலம் பாமாயில்அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்கள் எண்ணெய் அப்புறப்படுத்த வேண்டாம் என்றும் தங்களுக்கே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். கேடிவி எண்னெய் நிறுவனத்தினர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் எண்ணெய் அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்து விழுந்த கட்டிட மேற்கூரை.. அலறி அடித்து ஓடிய அதிகாரிகள்..