திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம்… ஈரோட்டில் இருந்து 10 டன் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அனுப்பி வைப்பு!!
திருப்பதியில் நாளை தொடங்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திலிருந்து 10 டன் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் திருப்பதிக்கு அனுப்பப்பட உள்ளன.
திருப்பதியில் நாளை தொடங்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திலிருந்து 10 டன் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் திருப்பதிக்கு அனுப்பப்பட உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
அதற்காக, பயன்படுத்தப்படுகின்ற தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு மற்றும் பணியாளர்களால் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திருப்பதியில் நாளை தொடங்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திலிருந்து 10 டன் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் திருப்பதிக்கு அனுப்பப்பட உள்ளன.