Video : தென்காசி காசிவிஸ்வநாதர் ஆயல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - 20ம் தேதி திருத்தேரோட்டம்!

தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 

First Published Oct 12, 2022, 11:36 AM IST | Last Updated Oct 12, 2022, 11:36 AM IST

தென்காசியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு உலக அம்மன் உடனாய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாரங்களை காண்பிக்கப்பட்டது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை; ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை இரு வேலைகளிலும் சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் காமதேனு, சிம்மம், ரிஷபம், கிளி போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி நடைபெறுகிறது. 22ஆம் தேதி காலை ஆனைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை சுவாமி காசி விஸ்வநாதர் அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து இரவு நடைபெறும் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதர் ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Video Top Stories