Asianet News TamilAsianet News Tamil

உலக நன்மை வேண்டி தை அமாவாசை நிகும்பலா யாகம் - மஹா ப்ரத்யங்கிரா தேவி பீடத்தில் பக்தர்கள் வழிபாடு

ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு பாலாற்றங்கரை  கரையோரம், மஹா ப்ரத்யங்கிரா தேவி பீடத்தில் உலக நன்மை வேண்டி தை அமாவாசை நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

First Published Jan 22, 2023, 8:31 PM IST | Last Updated Jan 22, 2023, 8:32 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள, மஹா ப்ரத்யங்கிரா தேவி பீடத்தில் தை அமாவாசையை முன்னிட்டு உலகம் நன்மை அடைய வேண்டும் என கிலோ கணக்கில் எடை கொண்ட  மிளகாய் வத்தலை சிறப்பு நிகும்பலா யாகம் நடைப்பெற்றது.

இந்த யாகத்தில் மஹா ப்ரத்யங்கிரா தேவியை மனம் உறங்கி வேண்டி மிளகாய் வத்தல், வெண் கடுகு, பட்டு வஸ்திரங்கள், பூ புஷ்பங்கள், பல்வேறு வகையில் பழங்கள், பால், நெய், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு  பின்னர் கிலோ கணக்கில் எடை கொண்ட மிளகாய் வத்தலை யாக  குண்டத்தில் போட்டு சிறப்பு பூஜைகளை பக்தர்கள் செய்தனர்.

கருவறையில் இருக்கும் அம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்து மஹா  தீபாரதனை காட்டப்பட்டது. உள்ளூர் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து மஹா ப்ரத்யங்கிரா தேவி அம்மனை வணங்கி சென்றனர்.

இதையும் படிங்க..பிக்பாஸ் 6 பைனலில் திடீர் டுவிஸ்ட்... யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் டைட்டிலை தட்டிச் சென்றார்

இதையும் படிங்க..அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு

Video Top Stories