Video : பாளையங்கோட்டை கோமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருவிழா! - கொடியேற்றம் கோலாகலம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். பழமையும்,பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.

First Published Oct 12, 2022, 11:52 AM IST | Last Updated Oct 12, 2022, 11:52 AM IST

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். பழமையும்,பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பு பெற்றதாகும். இத்திருவிழாவை முன்னிட்டு கோமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.

Video : தென்காசி காசிவிஸ்வநாதர் ஆயல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - 20ம் தேதி திருத்தேரோட்டம்!

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். முக்கிய நிகழ்வான 11-ம் திருவிழாவில் திருக்கல்யாணம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்

Video Top Stories