மேட்டூர் சரபங்கா திட்டம்.. அதிமுக ஒரு சொட்டு நீரை கூட சேமிக்கவில்லை.. அமைச்சர் குற்றச்சாட்டு
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் சரபங்கா இணைப்பு திட்டத்தில் ஒரு சொட்டு நீரை கூட சேமிக்கவில்லை என்றும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டம் கிடையாது. அது மத்திய அரசின் திட்டம் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பில் புதிதாக கட்டப்பட்ட கொள்ளிட கதவணையை இன்று ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் சரபங்கா இணைப்பு திட்டத்தில் ஒரு சொட்டு நீரை கூட சேமிக்கவில்லை.
மழைக்காலங்களில் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி,காவிரி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் வெள்ள நீரை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்.
மேலும் படிக்க:சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் RTI-ல் வராது.. ஆளுநர் மாளிகை பதில்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டம் கிடையாது. அது மத்திய அரசின் திட்டம். மேலும் பொதுப்பணித்துறையில் பணியாற்று தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி கோதாவரி திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அனைத்து ஏரி குளங்களும் தனது முழுக்க கொள்ளளவை எட்டி உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க:அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை.. நோயாளிகளுக்கு ஆபத்து.. அரசை எச்சரிக்கும் சீமான்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.