போலந்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் தீபாவளி விழா… இந்திய தூதருக்கு விருது வழங்கி கௌரவிப்பு!!

உக்ரைன் போரின் போது இந்தியர்களை பாதுகாப்புடன் மீட்ட இந்திய தூதருக்கு போலாந்தில் நடைபெற்ற தீபாவளி விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

First Published Nov 1, 2022, 5:42 PM IST | Last Updated Nov 1, 2022, 5:43 PM IST

உக்ரைன் போரின் போது இந்தியர்களை பாதுகாப்புடன் மீட்ட இந்திய தூதருக்கு போலாந்தில் நடைபெற்ற தீபாவளி விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் அந்நாட்டின் தமிழ்ச்சங்கம் சார்பில் தீபாவளி விழா மிகச்சிறபாக நடைபெற்றது.

இதையும் படிங்க: ரயில் டிக்கெட்டை தொலைத்தாலும் ரயில் பயணம் செய்யலாம்… எப்படி? முழு விவரம் உள்ளே!!

இதில் போலந்து நாட்டிற்கான இந்திய தூதர் நக்மா மொஹமது மாலிக் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்தியர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் விருதுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் உக்ரைன் போரின் போது இந்தியர்களை பாதுகாப்புடன் மீட்ட இந்திய தூதருக்கும் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற மான்கார் பழங்குடியினருக்கு நினைவுச்சின்னம் - பிரதமர் மோடி அறிவிப்பு

பின்னர் இந்த நிகழ்ச்சியில் நடனம், பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. போலந்து நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய மக்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக, தமிழ்ச்சங்கம் இந்த தீபாவளி விழாவை நடத்துவதாக அந்த சங்கத்தின் தலைவர் காலேஷா யூசுப் தெரிவித்துள்ளார்.