புகார் அளிக்க வந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர் - வைரல் வீடியோ!
கர்நாடக பாஜக அமைச்சர் சோமன்னா தன்னிடம் கோரிக்கை அளிக்க வந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சரான பாஜகவின் வி.சோமண்ணா, சாமராஜநகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு நிலப் பட்டா வழங்கிய நிகழ்ச்சியில் போது, நிலப் பட்டா கிடைக்காததால் கோபமடைந்த பெண் ஒருவர் அமைச்சரை பார்த்து கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த அமைச்சர் சோமன்னா அந்த பெண்ணை அறைந்துள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிறகு அமைச்சர் சோமன்னா அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘பாஜகவின் அமைச்சர்களின் தலைக்கு ஆணவம் சென்றுவிட்டது’ என்று கூறியுள்ளார். ‘செங்கோட்டை வளாகத்தில் இருந்து பெண்களை கவுரவப்படுத்துவது பற்றி பிரதமர் பேசுகிறார்.
இதுதான் நீங்கள் இந்தியாவின் பெண்களை பாதுகாக்கும் மற்றும் பாதுகாப்பை வழங்குவது? பிரதமரே, நீங்கள் இப்போது செயல்பட்டு அவரை பதவி நீக்கம் செய்வீர்களா ? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக நில வருவாய் சட்டத்தின் 94சி பிரிவின் கீழ் கிராமப்புறங்களில் நிலத்தை முறைப்படுத்துவதற்கான உரிமைப் பத்திரங்களுக்கு சுமார் 175 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்த பெண் கூறியதாவது, வருவாய்த் துறையின் கீழ் தனக்கு நிலம் வழங்கப்படாததால் அதைப்பற்றி கூற அமைச்சர் அருகே சென்றேன். அப்போது தான் அமைச்சர் என்னை அறைந்தார்’ என்று கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!