Asianet News TamilAsianet News Tamil

செருப்பை கழட்டி அடிக்க வந்த ஆயிஷா மீது பாசமலர் ரேஞ்சுக்கு பாசத்தை பொழியும் அசீம் - பிக்பாஸில் என்ன நடக்குது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலியும், பூனையுமாக முட்டி மோதிக்கொண்ட அசீமும், ஆயிஷாவும் தற்போது பாசமலர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

First Published Oct 26, 2022, 3:47 PM IST | Last Updated Oct 26, 2022, 3:47 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அசீம், கடந்த வாரம் நடந்த ரேங்கிங் டாஸ்கின் போது ஆயிஷாவை போடி.. வாடி என ஒறுமையில் பேசியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அசீமின் இந்த செயலை கண்டித்த கமல்ஹாசன், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வார்னிங்கும் கொடுத்தார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார் அசீம்.

இதையடுத்து ஆயிஷாவிடம் பேசி சமாதானம் ஆன அசீம், தற்போது பாசமலர் ரேஞ்சுக்கு அவர்மீது அன்பை பொழிந்து வருகிறார். இன்று நடைபெறு பொம்மை டாஸ்கில் இருவரும் ஒரு அணியாக இணைந்து விளையாடி வருகின்றனர். அதில் அண்ணன், தங்கை என ஒருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்தை பொழிவதை பார்க்கும் போது ‘என்னடா நடக்குது இங்க’ என்று தான் கேட்க தோன்றுகிறது. இதுகுறித்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... அசீமுக்கு ஆப்பு வைக்க குறும்படம் போடச் சொல்லும் தனலட்சுமி... பொம்மை டாஸ்கால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு

Video Top Stories