Asianet News TamilAsianet News Tamil

மோடி Road Show.!கோவையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.! எந்த பகுதியில் தெரியுமா.? வெளியான அறிவிப்பு

பிரதமர் மோடி நாளை கோவையில் வாகன பேரணி மேற்கொள்ளவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு கோவை பகுதிக்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

Transport has been changed for two days due to Modi visit to Coimbatore for parliamentary election campaign KAK
Author
First Published Mar 17, 2024, 2:47 PM IST | Last Updated Mar 17, 2024, 2:47 PM IST

கோவையில் மோடி ROAD SHOW

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாளை கோவையில் முக்கிய சாலையில் வாகன பேரணி மேற்கொள்ளவுள்ளார். இதனை தொடர்ந்து போக்குரவத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி,  கோவை மாநகரில் வருகிற 18.03.2024 -ஆம் தேதி பிரதமர்வருகையை முன்னிட்டு பிற்பகல் 2 .00 மணிமுதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. மேலும்  கனரக வாகனங்கள் 18.03.2024 காலை 06.00 மணிமுதல் மற்றும் 19.03.2024 காலை 11.00 மணிவரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Transport has been changed for two days due to Modi visit to Coimbatore for parliamentary election campaign KAK

அவினாசி சாலை

அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதூர், சிங்காநல்லூர் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 18.03.2024 ம் தேதி மதியம் 2 .00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அவினாசி சாலை SNR. சந்திப்பு வழியாக 100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி மேட்டுப்பாளையம் சாலை, டி.பி ரோடு, புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவினாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

19.03.2024 ம் தேதி காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை அவிநாசி சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிரக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருச்சி சாலை

திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், WPT Junction, ஆவாரம்பாளைம் ரோடு, கணபதி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என். ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருச்சி சாலையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாஜக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 

Transport has been changed for two days due to Modi visit to Coimbatore for parliamentary election campaign KAK

சத்தி சாலை

சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேட்டுப்பாளையம் சாலை இலகுரக வாகனங்கள்

மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் துடியலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சரவணம்பட்டி வழியாகவோ அல்லது GN Mill மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி KNG புதூர் வழியாகவோ அல்லது கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம் . பேருந்துகள் மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும், மேட்டுப் பாளையம் சாலை சங்கனூர் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் செல்லவேண்டும்.

காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி ரோடு, கணபதி, சூரியா மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மணியகாரம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம்.

மருதமலை, வடவள்ளி சாலை

மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து வரும் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபார்க், தெலுங்குவீதி, ராஜவீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம் . மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் லாலிரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் .

Transport has been changed for two days due to Modi visit to Coimbatore for parliamentary election campaign KAK

உக்கடம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்

உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி, பூமார்க்கெட், சிந்தாமணி, டி,பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி , பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கேற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக போக்குவரத்து துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

தேர்தல் தேதியை தெரிந்து கொண்டு தமிழகம் வந்தாரா மோடி.? எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios