தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி! வெளியான முக்கிய அறிவிப்பு

பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்றம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதல் மற்றும் பரப்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

The Election Commission has banned the release of polls till the end of polling KAK

பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு தொகுதி கிழக்கு தொகுதி தேர்தலானது வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் முடிவடைந்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளது. இதனிடையே தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு வெளியிடுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5.2.2025 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 

The Election Commission has banned the release of polls till the end of polling KAK

கருத்துக்கணிப்புக்கு கட்டுப்பாடு

எனவே இடைத்தேர்தலின்போது. வாக்குப்பதிவிற்கு முந்தைய  மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

டெல்லி தேர்தலில் புகுந்து விளையாடும் 'இலவசம்'; திராவிட கட்சிகளை மிஞ்சிய பாஜக, ஆம் ஆத்மி!

 ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.

The Election Commission has banned the release of polls till the end of polling KAK

தேர்தல் ஆணையம் - எச்சரிக்கை

இப்பிரிவின் விதிமுறைகளை மீறும். யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையம், 05.02.2025 (புதன்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை. வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோடை வெயிலுக்கு தமிழகம் தயார்.! மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios