தமிழகத்திலேயே சிறந்த காவல்நிலையம் எது தெரியுமா..? மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

மத்திய  உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபுவை சந்தித்து முசிறி காவல்நிலைய காவலர்கள் வாழ்த்து பெற்றனர்.
 

The central government has selected Musiri Police Station as the best police station in Tamil Nadu

காவல்நிலையங்களில் ஆய்வு

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த காவல்நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல்வேறு காவல்நிலையங்களைமத்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகளை விரைவாகப் பதிவு செய்தல், விசாரணை மற்றும் வழக்குகளை தீர்ப்பது, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை,காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்கியது.

மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் - மின்சார வாரியம் அதிரடி உத்தரவு

The central government has selected Musiri Police Station as the best police station in Tamil Nadu

சிறந்த காவல்நிலையம் முசிறி

இந்த விருது சான்றிதழை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முசிறி காவல் நிலைய ஆய்வாளர்  செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமுனி மற்றும் காவலர் ஆனந்தராஜ் ஆகியோர்  டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு அவர்களை நேரில் சந்தித்து விருதினை காண்பித்தனர். அவர்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதையும் படியுங்கள்

வானதி சீனிவாசன் கோமாவில் இருந்தாரா..? இல்லை செலக்டிவ் அம்னீசியா வந்து தவித்துக் கொண்டிருந்தாரா..? மநீம கேள்வி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios