நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார்..! சீமானுக்கு சிக்கல்- நீலாங்கரை வீட்டில் 2வது சம்மனை ஒட்டி சென்ற போலீஸ்
திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும் படி நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீசார் 2வது முறையாக சம்மன் கொடுத்துள்ளனர்.
சீமான் மீது பாலியல் புகார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்குனராக இருந்தபோது வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடிகை விஜயலட்சுமி நடித்திருந்தார். அப்பொழுது சீமான் மற்றும் விஜயலட்சுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை சீமான் ஏமாற்றியதாக கடந்த 2013 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் விஜயலட்சுமி புகார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளத்தில் சீமானை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வந்தார்.
7 முறை கருத்தரிப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி மற்றொரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து சீமான் திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் விடுதலை புலி தலைவர் பிரபாகரன் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்து இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் ஒன்றாக வாழ்ந்ததாகவும் சீமான் மூலம் தான் ஏழு முறை கருவுற்றதாகவும், ஆனால் சீமானின் கட்டாயத்தின் பேரில் அதனை கரு சிதைவு செய்ததாக தெரிவித்திருந்தார்.
விஜயலட்சுமியிடம் மருத்துவ பரிசோதனை
எனவே இந்த வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி கூறி இருந்தார்.இந்த புகார் மனு மீது வளசரவாக்கம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். நடிகை விஜயலட்சுமியை மகளிர் நீதிமன்றம் அழைத்து சென்ற போலீசார் நீதபதி முன்னிலையில் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் கொடுத்திருந்தனார். இந்த சம்மனை பெற்றுக் கொண்ட சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
சீமானுக்கு 2வது சம்மன்
அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராக இருந்தனர். அப்போது இந்த வழக்கு விவகாரம் தொடர்பான முழு தகவல்களையும் ஆவணங்களையும் கொடுத்தால் தான் விசாரணைக்கு ஆஜராக சரியாக இருக்கும் எனவும் கூறினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு சென்ற வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் 2வது முறையாக அளித்துள்ளனர் இதனை சீமான் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நீலாங்கரை வீட்டு வாசலில் உள்ள கதவில் சம்மனை போலீசார் ஒட்டி சென்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்