கலைஞர் கருணாநிதிக்கு ''நினைவு நாணயம்’’! மத்திய அரசு அனுமதி! இந்தியில் இடம் பெறும் ''தமிழ் வெல்லும்'' வாசகம்!
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக ''நினைவு நாணயம்'' வெளியிட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தாள் கொண்டாட்டம் கடந்த ஓராண்டாக தமிழகம் முழுவதிலும் திமுகவினர் கொண்டாடி வந்தனர். இதையொட்டி'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
மத்திய அரசு அனுமதி
நாட்டில் புகழ்பெற்ற தலைவர்களின் நினைவாக நாணயம் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபோல், கலைஞர் கருணாநிதிக்கும் நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ரூ.100 மதிப்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடும் படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு அனுமதி கோரப்பட்டது.
கடந்த ஜுன் 3ம் தேதி முடிந்த கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவில் நினைவு நாணயம் வெளியிடும் முயற்சியில் இந்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான நடைமுறைகள் முடிவடையாததால் மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் தற்போது நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ளார்.
Anbumani : ஏலத்தில் விடப்படும் எம்.பி.பி.எஸ் இடங்கள்.. நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்திடுக.. அன்புமணி
விரைவில் இதற்கான உத்தரவு அரசு கெஜட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவு நாணயத்தில் 'டாக்டர் கலைஞர் மு கருணாநிதி' என்றபெயருடன், 'தமிழ் வெல்லும்' எனும் வாசகம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாணயத்துக்கும் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை போற்றும் வகையிலும், மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (BSE) நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களையும் அச்சிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Adani : சென்னை வந்த அதானி.!! 5 மணி நேரம் மட்டுமே இருந்தார்: யாரை சந்தித்தார்.? என்ன பேசினார்?