நான் யாரு தெரியுமா? என்கிட்டயே பணம் கேக்குறியா? தொழிலதிபரை மிரட்டிய பாஜக பெண் நிர்வாகியை தட்டித்தூக்கிய போலீஸ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம்  வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்பவரை அனுகியுள்ளார்.

Fraud of Rs 2 lakh by claiming to buy tiles...BJP woman executive arrested tvk

தொழிலதிபரிடம் டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம்  மோசடி செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம்  வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்பவரை அனுகியுள்ளார்.

இதையும் படிங்க: கணவரை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் பிரியா எஸ்கேப்.. உல்லாசத்துக்காக பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்!

ரேகா குஜராத் கம்பெனியில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர் கண்ணனிடம் கடந்த 15.10.2022, மற்றும் 19.10.2022 ஆகிய தேதிகளில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி டைல்ஸ் வாங்கி தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து தொழிலதிபர் கண்ணன் கேட்கவே ரேகா வாங்கிய பணத்திற்கு செக் கொடுத்துள்ளார். கண்ணன் செக்கை வங்கியில் டெபாசிட் செய்யவே அங்கு பணமின்றி செக் ரிட்டன் ஆகிவிட்டது. இது குறித்து கண்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ரேகாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

விசாரணையின் போது விரைவில் பணத்தை திருப்பி தருவதாக ரேகா எழுதிக் கொடுத்து சென்றுள்ளார். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணத்தைக் கேட்டு ரேகாவிடம் கண்ணன் பணம் கேட்டு வந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும்,  திருவெறும்பூர் சரகதுறை துணைக் காவல் கண்காணிப்பாளரிடமும்  புகார் செய்தார். 

இதையும் படிங்க:  காதல் திருமணம் செய்த 10 நாளில் பிரிந்த மனைவி! புதுமாப்பிள்ளை கொடூர கொலை! நடந்தது என்ன? வெளியாக பகீர் தகவல்.!

இப்புகாரில் பண மோசடி செய்து வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டார். பணத்தை கேட்டால் நான் பாஜக பெண் பிரமுகர் என கூறி என்னை ஆள் வைத்து மிரட்டுகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய பிறகு ரேகா கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios