ஆன்லைனின் தனியுரிமையை மீறினால் ரூ.3 லட்சம் அபராதம், 3 ஆண்டு சிறை: காவல்துறை எச்சரிக்கை
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
தனிநபர்களின் படங்களை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும் என்ற எச்சரிக்கையுடன் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையில் இந்த அறிவிப்பில், பிறரின் புகைப்படங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் வெளியிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் லட்சக்கணக்கில் அபராதமும் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
டாக்டருக்கு படிக்க சிறந்த இடங்கள்! குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள்!
"தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்!" என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சைபர் க்ரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவசர உதவி பெறுவதற்கான லைஃப் லைன் எண்ணையும் காவல்துறை தனது பதிவில் கூறியிருக்கிறது. "தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930" என்று காவல்துறையின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி அடிடாஸ் ஷூவை எப்படி கண்டுபிடிக்கலாம்? டூப்ளிகேட் வாங்கி ஏமாறாதீங்க!