Asianet News TamilAsianet News Tamil

Armstrong படுகொலை.. 16 ஆண்டுகளுக்கு முன் சட்டக்கல்லூரியில் நடந்த அந்த சம்பவம் தான் காரணமா? போலீசார் விசாரணை!

Armstrong Murder : இந்தியாவையே அதிர வைக்கும் ஒரு சம்பவமாக மாறியது, நேற்று சென்னையில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை.

BSP Tamil nadu State president murder police investigation on 2008 ambedkar law college riot ans
Author
First Published Jul 6, 2024, 6:11 PM IST | Last Updated Jul 6, 2024, 6:11 PM IST

ஆம்ஸ்ட்ராங் படுகொலை 

நேற்று ஜூலை 5ம் தேதி மாலை, பெரம்பூரில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்று தனது சகாக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். அப்போது உணவு விநியோகம் செய்யும் நபர்களைப் போல, இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறுக்கும் மேற்பட்டோர், அங்கு நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கழுத்து மற்றும் தலைப்பகுதியில் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். 

அதன் பிறகு அவரை இரத்த வெள்ளத்தில் மீட்ட உறவினர்கள், ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்த அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார். இதனையடுத்து அவருடைய படுகொலையை கண்டித்து தலித் மக்கள் இயக்கங்களும், அவருடைய ஆதரவாளர்களும் நேற்று இரவு முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்! ஆம்ஸ்ட்ராங்கை போட்டுத்தள்ளிய கும்பல்! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்!

10 தனிப்படை அமைத்து செயல்பட்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கும் எண்ணத்தில் தான் இந்த படுகொலையை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இருப்பினும் இது வேண்டுமென்றே போலீசார் ஜோடிக்கும் ஒரு விஷயமாக உள்ளது என்று ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலீசார் மற்றொரு கோணத்தில் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.

2008 அம்பேத்கர் சட்டக் கல்லூரி 

பலருக்கும் பின்வருமாறு சொல்லப்படவருக்கும் உண்மை சம்பவம் குறித்து தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்போது பல நியூஸ் சேனல்களில் இந்த சம்பவம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் மாதம் 11-ம் தேதி, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களிடையே பெரும் கைகலப்பு மூண்டது. 

கொடூர ஆயுதங்கள் பலவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர், ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் குறிப்பிட்ட விழா கொண்டாட்டங்களில் இருந்ததாகவும், அதற்காக அச்சிடப்பட்ட பத்திரிகைகளில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று அச்சிடாமல், வெறும் சட்டக்கல்லூரி என்று அச்சிட்டதால், வேறொரு தரப்பு மாணவர்கள் அவர்களோடு சண்டையில் இறங்கியதாக கூறப்பட்டது. 

அன்று பெரும் கலவரம் வெடித்தது, இதில் முக்கிய இரண்டாவது குற்றவாளியாக கைதானவர் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் என்று கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகு சாட்சிகளின் பிறழ்வு காரணமாக மூன்றாண்டு சிறை தண்டனைக்கு பிறகு அவர் விடுதலை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அந்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் தான் இந்த படுகொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்களின் கல்விக்காகவும்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை இப்படி கொன்னுட்டாங்களே.. உதயநிதி வேதனை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios