Asianet News TamilAsianet News Tamil

55 ஆண்டுகளுக்குப்பின் மலேசியா சென்று தந்தையை கல்லறையை கண்டுபிடித்த நெல்லை மனிதர்! உருக்கமான நிகழ்வு

55 ஆண்டுகளுக்குப்பின் தனது தந்தையின் கல்லறையை மலேசியாவில் கண்டுபிடித்து, கண்ணீர் மல்க திருநெல்வேலியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்திவருபவர் அஞ்சலி செலுத்திய மனதை நெகழச் செய்யும் சம்பவம் நடந்துள்ளது.

A Tirunelveli man flies to Malaysia after 55 years to locate his father's grave
Author
First Published Nov 22, 2022, 1:21 PM IST

55 ஆண்டுகளுக்குப்பின் தனது தந்தையின் கல்லறையை மலேசியாவில் கண்டுபிடித்து, கண்ணீர் மல்க திருநெல்வேலியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்திவருபவர் அஞ்சலி செலுத்திய மனதை நெகழச் செய்யும் சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் திருமாறன்(வயது56). நெல்லை மாவட்டத்தில் உள்ள வெங்கடம்பட்டியில் தொண்டுநிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் தந்தை ராமசுந்தரம் என்ற பூங்குன்றன். மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். தந்தை பூங்குன்றன் மலேசியாவில் இறந்த 6மாதங்களுக்குப்பின்புதான் திருமாறன் பிறந்தார்.

ரோஜ்கர் மேளா! 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருமாறன் தாய் ராதாபாய், தனது கணவர் பூங்குன்றன் காலமானபின் அவர் உடலை மலேசியாவில் அடக்கம் செய்துவிட்டு, பச்சிளங்குழந்தையாக இருந்த திருமாறனுடன் இந்தியாவுக்கு வந்துவிட்டார். தந்தையின் வாசமே அறியாமல், தாயின் அரவணைப்பிலும், வளர்ப்பிலும் திருமாறன் வளர்ந்தார். திருமாறன் தாய் ராதாபாயும் கடந்த 35 ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்துவிட்டார்.

தற்போது 56வயதாகியுள்ள திருமாறனுக்கு தனது தந்தையின் கல்லறையை நேரில் ஒருமுறைப் பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கடமையும், எண்ணும் இருந்தது. இதற்காக தனது தந்தை பூங்குன்றன் மலேசியாவில் வேலை செய்த பள்ளியின் பெயர், விவரங்களை கூகுள் மூலம் தேடி திருமாறன் கண்டுபிடித்தார்.

மலேசியாவில் தனது தந்தையிடம் பயின்ற மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் உதவியுடன் தனது தந்தையின் கல்லறையை மலேசியாவுக்குச் சென்று 56 ஆண்டுகளுக்குப்பின் திருமாறன் கண்டுபிடித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இப்படியும் ஒரு காதலா.. நெற்றியில் குங்குமமிட்டு இறந்த காதலியை திருமணம் செய்த இளைஞர்.. உறவினர்கள் முன் சபதம்.!

அந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து திருமாறன் “ தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேட்டுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: 

என் தந்தை பூங்குன்றன் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றியபோது 1967ம் ஆண்டு அவரின் 35வயதில் உடல்நலன் பாதிக்கப்பட்டு காலமாகிவிட்டார். என் தந்தையை மலேசியாவிலேயே அடக்கம் செய்த என் தாய் ராதாபாய், இந்தியா திரும்பினார். அவர் காலமாகி 6 மாதங்களுக்குப்பின்புதான் நான் பிறந்தேன். என் தந்தையின் வாசணை கூட அறியாமல் வளர்ந்தேன். என் தாயும் கடந்த 35 ஆண்டுகளுக்குமுன்பு காலமாகிவிட்டார். 

பிறந்ததுமுதல் என் தந்தைபற்றி அறியாமல் இருந்த நான் அவரி்ன் கல்லறைக்குச் சென்று நினைவஞ்சலி செலுத்த விரும்பினேன். இதற்காக கூகுள் தளத்தில் என் தந்தை மலேசியாவில் பணியாற்றிய பள்ளி குறித்த விவரம், பெயர் ஆகியவற்றைத் தேடினேன்.

அப்போது, என் தந்தை மலேசியாவில் உள்ள கெர்லிங்கில் உள்ள கெர்லிங் தேசிய வாகை தமிழ் பள்ளியில் பணியாற்றியது தெரியவந்தது. அந்த பள்ளியை கூகுளில் தேடியபோது அது சிதலமடைந்ததால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. அதன்பின் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார் சிதம்பரத்துக்கு மின் அஞ்சல் செய்து, என் தந்தையின் விவரங்களைக் கூறி அவரின் கல்லறையை காண வேண்டும் எனத் தெரிவித்தேன்.

அதன்பின் தலைமை ஆசிரியர் சிதம்பரம், என் தந்தை ராமசுதந்திரத்திடம் பயின்ற மாணவர்கள் மோகன் ராவ் மற்றும் நாகப்பனைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் விவரங்களைத் தெரிவித்தார். அந்த இருவரும் தங்களின் ஆசிரியரின் கல்லறையை கெர்லிங் நகரில் தேடிக் கண்டுபிடித்து, எனக்கு தகவல் தெரிவித்தனர்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் சர்ச்சை! முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் பிரசங்கம் செய்ய அழைப்பு

என் தந்தையின் கல்லறையைக் காண கடந்த 8ம் தேதி நான் மலேசியாவுக்குச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினேன். என் தந்தையின் கல்லறையின் அவரின் சிறிய அளவிலான படம், அவரின் பெயர், பிறந்த ஆண்டு, இறந்தநாள் ஆண்டு ஆகியவை இருந்தது. என் தந்தையின் கல்லறையில்  பலமுறை விழுந்து வணங்கினேன், அஞ்சலி செலுத்திவிட்டு கடந்த 16ம் தேதி தாயகம் திரும்பினேன்

என் தந்தையின் மாணவர் நாகப்பன் என்னிடம் கூறுகையில், அவரை நல்லநிலைக்கு உருவாக்கியதே என் தந்தை என்று தெரிவித்தார். மற்றொருமாணவர் கமலம் கூறுகையில், அவர் சரியாக படிக்காமல் வீட்டில் அடிவாங்கியபோது, என் தந்தைதான் அதிகமான கவனம் செலுத்தி படிக்க வைத்துள்ளார்.பெருமாள் என்ற மாணவருக்கு என் தந்தை ஒரு மிதிவண்டியையும் பரிசாக வழங்கி, உதவியுள்ளார். நான் மலேசியாவில் இருந்தபோது, பெருமாள் இருமுறை என்னைச் சந்தித்தார்.

நான் நெல்லையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறேன். இதுவரை 60 ஆதரவற்றோருக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன், 100 பேருக்கு வேலைவாங்கி கொடுத்திருக்கிறேன். 3,009 ரத்ததான முகாம்கள் நடத்தியுள்ளேன். என்னுடைய பெற்றோரை இழந்தபின்புதான், ஆதரவற்றோர் நிலைமை எந்த அளவுகடினம் என்பது புரியும்

இவ்வாறு திருமாறன் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios