கோவில் திருவிழாவில் கவர்ச்சி பொங்க ஆபாச நடனம்; ஏற்பாட்டாளர் உள்பட 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவில் இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடனம் ஆடிய கலைஞர்கள் ஆபாசமாக ஆடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை அம்மன்நகர் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நடன கலைஞர் நல சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் இணையதளம் மூலம் புகார் செய்தார்.
இதில் நீதிமன்றம் உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடம் - தேசிய ஆணைய தலைவர் வேதனை
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாகி இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன்(65) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த கோபிநாத்(31), ஆபாச நடனம் ஆடிய நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(26) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் மூவரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
18 வகையான போட்டி தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி உத்தேச தேதி அறிவிப்பு