மதுரை மேல அனுப்பானடியில் கள்ள காதல் தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சந்திர சேகர் . இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். 

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகள் காளிஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.  இதை காண்ட காளீஸ்வரியில் தம்பி இருவரையும் கண்டித்த தாக தெரிகிறது.  ஆனால் இருவரும் அதை கண்டுகொள்ளவில்லை, இதனால் காளீஸ்வரி தம்பி செல்வம் மற்றும் ரமேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ரமேஷ்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்தில்  ரமேஷ் பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் சம்பவ இடத்திற்கு மதுரை மாநகர  காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) கார்த்திக் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பின்னர் ரமேஷ் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வம் உள்ளிட்ட 4 பேரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Exclusive Interview : என்னை எதிர்க்க முடியாமல் அதைச்செய்ததே திருமா குண்டாஸ்தான்... ஆதாரத்தை வைத்து கொதிக்கும் காயத்ரி ரகுராம்..!