Asianet News TamilAsianet News Tamil

30 நிமிடத்தில் 350 கி.மீ. பயணிக்கும் ஹைப்பர்லூப்! எலான் மஸ்க்கை வியக்க வைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்!

ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் வாகனத்தில் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம். ஆனால், சென்னை மாணவர்கள் உருவாக்கியுள்ள ஹைப்பர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.

350 Km In 30 Minutes Via Vacuum-Powered Pod? This Chennai To Bengaluru Journey Now Possible sgb
Author
First Published Oct 12, 2023, 3:36 PM IST

ஒரு வெற்றிடக் குழாய் பாதை வழியாக 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடப்பதற்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் குழு உருவாக்கி இருக்கிறது. இத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால்  சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 25 நிமிடங்களுக்குள் பயணிக்கலாம்.

ஐஐடி மெட்ராஸின் மாணவர்கள் குழு படைத்துள்ள 'அவிஷ்கர் ஹைப்பர்லூப்' என்ற இந்த ஆராய்ச்சித் திட்டம் உலகம் முழுவதிலும் கவனம் பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஹைப்பர்லூப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஐஐடி மெட்ராஸ் குழு இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எடின்பரோவில் நடைபெற்ற நிகழ்வில் தங்கள் ஹைப்பர்லூப் தொழில்நுடபத்திற்காக விருதையும் வென்றது.

போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஹைப்பர்லூப், அதிக வேகத்தில் பயணிக்கும். ஆனால் அதிக ஒலிமாசு, காற்று மாசு ஏற்படுத்தாது. விமான நிலையங்கள் போல பெரிய உள்கட்டமைப்புகள் வசதிகளும் தேவைப்படாது.

புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் சலுகையில் கூடுதல் டேட்டா! வோடபோன் ஐடியா சூப்பர் பிளான்!

ஹைப்பர்லூப் மூலம் ரயில்களுக்குத் தேவையானதைப் போன்ற வசதிகளை பயன்படுத்தி விமானத்தின் வேகத்தை அடைய முடியும். வெற்றிடக் குழாய்களுக்குள் செல்லும் ஹைப்பர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, இதில் எந்த கார்பனையும் வெளியேற்றமும் இல்லை. பயணிகள் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

ஐஐடி மெட்ராஸின் 'அவிஷ்கர் ஹைப்பர்லூப்' திட்டம் வெற்றிடக் குழாய்களில் சோதனை செய்யப்பட்டு அதில் வெற்றி அடைந்துள்ளது. இத்திட்டத்தின் மாணவர் குழுத் தலைவரான மேதா கொம்மாஜோஸ்யுலா, ஜூலை 2023 இல் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் இப்போது செல்லும் இதே வேகத்தில் தொடர்ந்து வேலை செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் முதல் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்க முடியும்" என்று கூறியிருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சில மாதங்களிலேயே அவர்கள் சோதனையை வெற்றிகரமாச் செய்துள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் அறிமுகப்படுத்திய, ஹைப்பர்லூப் அமைப்பு பகுதி வெற்றிட சூழல்களில் காந்த உந்துவிசையைப் பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பில் மணிக்கு 1,000 கிமீ வேகத்தை அடைய முடியும். 

OnePlus 12: இனிமேல் ஐபோன் எல்லாம் தூசு... இதுதான் மாஸ்... தட்டித்தூக்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்!

ஐஐடி மெட்ராஸ் குழு தங்கள் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் தொடர்பாக ஆறு காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளது. வாகனத்தின் லெவிடேஷன், உந்துவிசை, குழாய் கட்டுமானம் மற்றும் பேட்டரி குளிரூட்டல் போன்ற அம்சங்களுக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.

“வெற்றிடத்திற்குள் காற்றுச் சீரமைப்பை எவ்வாறு செய்வது என்று பார்க்கிறோம். எவ்வளவு காற்றோட்டத்தை அனுமதிக்கலாம். எத்தனை பேர் அமரலாம் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் ஆராயப்பட வேண்டும்" என்றும் ஐஐடி மாணவர் குழுத் தலைவரான மேதா சொல்கிறார்.

கடந்த ஆண்டு, ஐஐடி மெட்ராஸ் உள்நாட்டு ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான முன்மொழிவை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகம் ரூ.8.34 கோடி நிதியை ஐஐடி மெட்ராஸுக்கு வழங்கியுள்ளது.

மொபைல் போனை ரீ-ஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மையா? பல பிரச்சினைகளைத் தீர்க்கும் எளிய வழி இதுதான்!

Follow Us:
Download App:
  • android
  • ios