IPL Auction 2025 : முதல் நாள்; ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள் - லிஸ்ட் இதோ!
IPL Auction 2025 : வரவிருக்கும் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. நாளையும் அது நடக்கவுள்ளது.
2025 ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத வீரர்களின் முழு பட்டியலை இப்பொது பார்க்கலாம். நேவால் வதேரா மற்றும் அப்துல் சமத் ஆகியோர் கேப் செய்யப்படாத வீரர்களில் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஏலத்தின் அடிப்படை விலையான 30 லட்சத்தில் இருந்து, வதேரா 4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதே சமயம் லக்னோ, கிரிக்கெட் வீரர் சமத்துக்கு அதே தொகையை கொடுத்தது.
மும்பை இந்தியன்ஸ், இந்த ஏலத்தில் தாமதமாக நுழைந்தது, ஆனால் அவர்களின் முதல் தேர்வு நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் (12.50 கோடி). ஜோஃப்ரா ஆர்ச்சர் (12.5 கோடி) மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் (₹12.50 கோடி) ஆகியோர் அதிக பணம் சம்பாதித்த மற்ற வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது அணியில் இந்திய ஆல்ரவுண்டரைத் திரும்பக் கொண்டு வர 23.75 கோடி ரூபாய் கொடுத்ததால், இஷான் கிஷன் SRHல் 11.25 கோடிக்கு ஒரு புதிய அணியில் நுழைந்தார் என்றே கூறலாம்.
10 லட்சத்தில் ஆரம்பித்த சாஹல்; ரூ.18 கோடிக்கு தட்டி தூக்கிய பஞ்சாப் – இப்படியொரு வளர்ச்சியா?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 27 கோடி செலவழித்து, பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ஐ ஐபிஎல்லின் விலையுயர்ந்த வாங்குதலாக மாற்றியது. இதன் மூலம் ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை அவர் முறியடித்தார் என்றே கூறலாம். பிரபல பஞ்சாப் அணி சரியாக 26.75 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்து குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மிட்செல் ஸ்டார்க்கின் 24.75 கோடி என்ற சாதனையை ஷ்ரேயாஸ் முறியடித்ததும் நினைவுகூரத்தக்கது.
ககிசோ ரபாடாவை பெற குஜராத் டைட்டன்ஸ் 10.75 கோடி செலவழித்து. ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 15.75 கோடிக்கு விற்கப்பட்டார். மார்கியூ செட் 2ல், இந்திய பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் முன்னணியில் இருந்தனர். ஷமியை SRH 10 கோடிக்கு எடுத்தது, அதே சமயம் சிராஜ் குஜராத் அணி 12.25 கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ரிக்கி பாண்டிங் போனை கூட எடுக்காத ஷ்ரேயாஸ் ஐயர் – பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனா?