Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்களா முக்குலத்தோர்.? பட்டியல் வெளியிட்டு அண்ணாமலைக்கு செக் வைக்கும் சூர்யா

பாஜகவால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து மாபெரும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். 

Trichy Surya has said that the members of the mukalathor community are being removed from the BJP KAK
Author
First Published Jun 25, 2024, 4:09 PM IST

பாஜகவில் அதிகார மோதல்

திமுக- அதிமுகவிற்கு போட்டியாக தமிழகத்தில் காலூன்ற பாஜக முயறசித்து வருகிறது. அந்த அளவிற்கு தங்களது உட்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பாஜக இழந்த நிலையில் உட்கட்சி மோதலானது வலுத்துள்ளது. குறிப்பாக அண்ணாமலை தமிழக அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை இரண்டு மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து விலகிய அவர் ஆளுநர் பணியை மேற்கொண்டு இருந்தார். சுமார் 4  ஆண்டுகள் ஆளுநர் பதவியில் தொடர்ந்த தமிழிசை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்தார்.

இதன் காரணமாக முன்னாள் தலைவருக்கும் இந்நாள் தலைவருமான அண்ணாமலைக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. யார் பெரியவர்கள் என்கின்ற வாக்குவாதமும் நீடித்தது. இதில் ஒரு கட்டத்தில் பாஜகவில் அதிக அளவில் ரவுடிகள் சேர்க்கப்பட்டதாக தமிழிசை நேரடியாக விமர்சித்து இருந்தார் இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா பதிலடி கொடுத்திருந்தார் தமிழிசை காலத்தில் பாஜகவில் யாரும் இணைய கூட வரவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து பாஜக மத்தியில் கடும் உட்கட்சி மோதல் இருப்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியது இதனையடுத்து தான் தேசிய தலைமை தமிழிசையை கண்டித்தது. இதனால் செய்தியாளர்களை சந்திக்காமல் தமிழிசை அமைதி காத்து வந்தார்.

மனு கொடுத்துவிட்டால் ஆளுநர் ஆட்சியை கலைத்துவிடுவாரா? நாங்கள் சும்மா விடுவோமா? முத்தரசன் ஆவேசம்

திருச்சி சூர்யா நீக்கம்

 பாஜகவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக  பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.  அதன்படி அண்ணாமலை ஆதரவாளராக இருந்த திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  மேலும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த கல்யாணராமனும் ஒரு வருடத்திற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை கூறத் தொடங்கினார் பாஜகவில் சாதி அரசியல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இன்று திருச்சி சூர்யா வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவில் பாஜகவில் இருந்து முக்குலத்தோர் அமைப்பு சேர்ந்தவர்கள் யார் நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற பட்டியலில் வெளியிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அண்ணாமலை திட்டம் திட்டி வரும் நிலையில், அண்ணாமலைக்கு கூடவே இருந்து தற்போது எதிராக திரும்பி உள்ள திருச்சி சூர்யா பாஜக முக்குலத்தோருக்கு எதிரான இயக்கம் பாஜக என்பதை காட்டும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பாஜகவின் நிறுவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் ஓட்டு போட முடியாது.. கண்டிப்பாக இது தேவை- தேர்தல் ஆணையம் அதிரடி

Follow Us:
Download App:
  • android
  • ios