Irani Chai : ஹைதராபாத் ஸ்பெஷல் 'இரானி டீ'... இனி நீங்களும் வீட்டில் செய்யலாம்.. ரெசிபி இதோ!
இந்த பதிவில் வீட்டிலேயே எளிய முறையில் இரானி டீ செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலர் டீ பிரியர்கள் அதிகமாகவே உள்ளனர். டீக்கும் இந்தியர்களுக்கும் ஒரு நீண்ட உறவு என்றே சொல்லலாம். ஏனென்றால், பலர் தங்களது நாளை ஒரு கப் டீயுடன் தான் ஆரம்பிக்கிறார்கள்.
டீயில் பிளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, புதினா டீ என பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இரானி டீ. இந்த இரானி டீ ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமானது என்பதால், இது 'ஹைதராபாத் இரானி டீ' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹைதராபாத் இரானி டீயானது எல்லா இடங்களிலும் கிடைக்காது. ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இந்த டீ கிடைக்கும். எனவே, இதுபோன்ற சமயங்களில் வீட்டிலேயே இரானி டீ செய்யலாம் தெரியுமா..?
ஆம், உங்களுக்கு இரானி டீ பிடிக்கும் என்றால் வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் வீட்டிலேயே எளிய முறையில் இரானி டீ செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: டீ கடை இனிப்பு போண்டாவை இனி வீட்டிலேயெ செய்யலாம்.. அது வெறும் 10 நிமிடத்தில்.. ரெசிபி இதோ!
இரானி டீ செய்ய தேவையான பொருட்கள்:
பால் - 500 மில்லி
டீ தூள் 2 - ஸ்பூன்
சர்க்கரை 2 - ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க் - 2 ஸ்பூன் ஏலக்காய் - 2
தண்ணீர் - 2 கப்
இதையும் படிங்க: உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்லெட் செஞ்சு கொடுங்க.. ரெசிபி இதோ!
இரானி டீ செய்முறை:
இராணி டீ செய்ய முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்த 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதில் எடுத்து வைத்த டீ தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து, பின் அதை தட்டால் மூடி வைக்கவும். இப்போது நீங்க யோசிக்கலாம், இப்படி மூடி வைத்தால் அது கொதிக்க ஆரம்பித்தால் டீ வெளியேறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட நிலையில் தம் பிரியாணி செய்யும் விதத்தில் ஆவி வராமல் இருக்க அதை மூடி வையுங்கள். குறிப்பாக, மிதமான தீயில் 20 நிமிடம் கொதிக்க வையுங்கள்.
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த பாலை சேர்த்து கொதிக்க வையுங்கள். பாலுடன் எடுத்து வைத்த ஏலக்காயை இடித்து, அதில் போடுங்கள். பின் பாலை ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள். பால் நன்றாக கொதித்து பாதியாக குறைந்தவுடன், அதில் எடுத்து வைத்த கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மீண்டும் கொதிக்க வையுங்கள். இப்போது பரிமாறும் கிளாஸில் ஏற்கனவே தயாரித்து வைத்த டிகாசனை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதன் மேல் பாலை ஊற்றுங்கள். அவ்வளவுதான் சூடான ஈரானில் ரெடி!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D